உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / மந்தகதியில் மழைநீர் கால்வாய் பணி அன்னை சத்யா நகர் மக்கள் அவதி

மந்தகதியில் மழைநீர் கால்வாய் பணி அன்னை சத்யா நகர் மக்கள் அவதி

மாதவரம்:மாதவரம் மண்டலத்திற்கு உட்பட்ட, 28வது வார்டு அன்னை சத்யா நகரில், இரண்டு மாதங்களுக்கு முன் மழைநீர் கால்வாய் பணிகள் துவங்கின.நகரில் உள்ள நான்கு தெருக்களில் பணிகள் முடிந்த நிலையில், பிரதான சாலையில் மட்டும் பணிகள் கிடப்பில் போடப்பட்டு உள்ளன.இதனால், பொது குடிநீர் தொட்டியில் தண்ணீர் நிரப்ப, குடிநீர் லாரிகள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.இதனால், பகுதி மக்கள் தண்ணீர் கேனை, 30 ரூபாய் கொடுத்து வாங்க வேண்டியுள்ளது.இதுகுறித்து, அன்னை சத்யா நகர் குடியிருப்போர் நலச்சங்க தலைவர் மாயாண்டி கூறியதாவது:நகருக்குள் வர வேண்டிய ஒரே வழியான அன்னை சத்யா நகர் பிரதான சாலையில், மழைநீர் வடிகால் பணிகள் அப்படியே கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால், கழிவுநீர் வடிகால்வாய் பணிகளும் ஆரம்பிக்கப்படவில்லை.இதுகுறித்து, மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டால் உரிய பதில் இல்லை. அவசர தேவைக்கு ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்கள் நகருக்குள் வரமுடியவில்லை. மழைக் காலம் துவங்கும் முன், பணிகளை முடிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ