உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / குடிநீர் பற்றாக்குறைக்கு தீர்வு மினி டேங்க் அமைப்பு

குடிநீர் பற்றாக்குறைக்கு தீர்வு மினி டேங்க் அமைப்பு

திருவாலங்காடு:திருவாலங்காடு ஒன்றியம், ஜாகீர்மங்கலம் ஊராட்சிக்கு உட்பட்டது அருந்ததியினர் காலனி. இங்கு, 70க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில், 250க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.இவர்களுக்கு, குடிநீர், ஒரு கி.மீ., தூரத்தில் அமைந்துள்ள ஜாகீர்மங்கலம் கிராமத்தில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் இருந்து வினியோகிக்கப்படுகிறது.இதனால், அவ்வப்போது குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுவதாகவும், மோட்டார் பழுது, குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு சீரமைப்பதில் தாமதம் ஏற்படுவதால் பல நாட்கள் குடிநீர் வினியோகிப்பதில் சிக்கல் உள்ளதாக மக்கள் புலம்பினர்.இதுகுறித்த செய்தி நம் நாளிதழில் வெளியானதையடுத்து, ஒன்றிய பொது நிதியிலிருந்து, 5 லட்சம் ரூபாய் மதிப்பில் ஆழ்த்துளைக் கிணறு மற்றும் மினி குடிநீர் தொட்டி அமைக்க திருவாலங்காடு ஒன்றிய குழு தலைவர் ஜீவா நிதி ஒதுக்கினார். அதன்படி மினி குடிநீர் தொட்டி அமைக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை