உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / திருத்தணி கிளை சிறையில் எஸ்.பி., ஆய்வு

திருத்தணி கிளை சிறையில் எஸ்.பி., ஆய்வு

திருத்தணி:திருத்தணி பழைய தாலுகா அலுவலகத்தில், கிளை சிறை உள்ளது. இங்கு, திருத்தணி வருவாய் கோட்டத்தில் போலீசார் கைது செய்யப்படும் நபர்களை அடைத்து வைப்பர். தற்போது, 20க்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளனர்.நேற்று, சென்னை புழல் மத்திய சிறை - 2 எஸ்.பி., கிருஷ்ணராஜ், திருத்தணி கிளை சிறையில் ஆய்வு செய்தார். அப்போது, சிறையின் அடிப்படை வசதிகள் மற்றும் கைதிகளுக்கு தரமான உணவு வழங்கப்படுகிறதா என ஆய்வு செய்தார்.மேலும், அங்குள்ள பதிவேடுகள் மற்றும் வருகை பதிவேடுகளை ஆய்வு செய்தார். தொடர்ந்து, சிறை காவலர்களிடம், கைதிகளிடம் கனிவாக நடந்துக் கொள்ளுங்கள் என, அறிவுறுத்தினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை