உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம்

மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம்

திருத்தணி:திருத்தணி அரசு மருத்துவமனை வளாகத்தில், மாதந்தோறும், இரண்டாவது புதன்கிழமையில், மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ முகாம், மருத்துவ சான்றுடன்கூடிய தனித்துவம் வாய்ந்த தேசிய அடையாள அட்டை இணைய வழியில் பதிவேற்றம் செய்வதற்கான சிறப்பு முகாம் நடந்து வருகிறது.அந்த வகையில், நேற்று, திருத்தணி அரசு மருத்துவமனையில், மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு முகாம் நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சீனிவாசன் தலைமை வகித்தார்.இதில், அரசு மருத்துவர்கள் ராதிகாதேவி, எலும்பு மருத்துவர் வெங்கடேஷ், கண் மருத்துவர் தணிகைமலை உட்பட மருத்துவ அலுவலர்கள் பங்கேற்று, மாற்றுத்திறனாளிகளுக்கு தரவரிசை சான்றிதழ் வழங்கினர்.முகாமில், திருத்தணி வருவாய் கோட்டத்தில் இருந்து, 100க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் பங்கேற்றனர். முகாமில், 68 பேருக்கு மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை, 30 பேருக்கு, தனித்துவம் வாய்ந்த தேசிய அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன.மேலும், பேருந்து, ரயிலில் இலவச பயணம் செய்வதற்கான சலுகை அட்டைகள் வழங்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி