மேலும் செய்திகள்
மூத்த குடிமக்களுக்கு 'மொபைல் ஆப்' ரெடி
10-Jun-2025
திருவள்ளூர்:மூத்த குடிமக்களுக்கான பிரத்யேக செயலியை, மொபைல் போனில் பதிவிறக்கம் செய்து பயனடையுமாறு, கலெக்டர் கேட்டுக் கொண்டுள்ளார்.திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:தமிழக அரசின் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில், மூத்த குடிமக்கள் நலனுக்காக 'மொபைல்' செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இச்செயலியில், மூத்த குடிமக்களுக்கு தேவையான வழிகாட்டுதல்கள் இடம்பெற்றுள்ளன.குறிப்பாக அருகில் உள்ள முதியோர் இல்லங்கள், மருத்துவமனைகள், மக்கள் மருந்தகம், மத்திய - மாநில திட்டங்கள், மாவட்ட சட்ட சேவை உள்ளிட்ட பல்வேறு விபரங்கள் உள்ளன.திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மூத்த குடிமக்கள், 'கூகுள் பிளே ஸ்டோர்' மூலமாகவோ அல்லது Seniorcitizen.tnsocialwelfare.tn.gov.in என்ற இணையதளம் மூலமாகவோ பதிவிறக்கம் செய்து பயனடையலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
10-Jun-2025