உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / துணை தேர்வு மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி

துணை தேர்வு மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி

திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளிக்கல்வித் துறை சார்பில், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் பிளஸ் 1 தேர்ச்சி பெறாத மாணவ - மாணவியருக்கு துணை தேர்வு எழுதுவதற்கான சிறப்பு பயிற்சி வகுப்பு நடந்தது.திருவள்ளூர் ஸ்ரீ நிவேதன் பாடசாலை மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 கலை பிரிவில் தேர்ச்சி பெறாத மாணவ - மாணவியருக்கும், மருத்துவ கல்லூரி கூட்டரங்கில் அறிவியல் பாடப்பிரிவில் பிளஸ் 1 வகுப்பு மாணவ - மாணவியருக்கும் சிறப்பு பயிற்சி வகுப்பு நடந்தது.இதில், திருவள்ளூர் ஸ்ரீநிகேதன் பள்ளியில் நடந்த சிறப்பு பயிற்சி வகுப்பை, கலெக்டர் பிரதாப் பார்வையிட்டு, மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார். 'இரண்டு நாட்களாக நடந்த சிறப்பு பயிற்சி வகுப்பு வாயிலாக, அனைத்து மாணவர்களும் துணை தேர்வில் தேர்ச்சி பெற்று, உயர்கல்விக்கு கொண்டு செல்ல வேண்டும்' என, கலெக்டர் பிரதாப் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி