உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / விளையாட்டு கோடைக்கால பயிற்சி முகாம் வீரர் - வீராங்கனையர் ஆர்வம்

விளையாட்டு கோடைக்கால பயிற்சி முகாம் வீரர் - வீராங்கனையர் ஆர்வம்

திருவள்ளூர்:தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், திருவள்ளூர் மாவட்ட விளையாட்டு அரங்கில், நடப்பு ஆண்டிற்கான கோடைக்கால பயிற்சி முகாம், கடந்த மாதம் 25ம் தேதி துவங்கி, வரும் 15ம் தேதி வரை நடக்கிறது.தொடர்ந்து, 21 நாட்களுக்கு காலை - மாலை இரு வேளையும் வீரர் - வீராங்கனையருக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இப்பயிற்சி முகாமில் தடகளம், கால்பந்து, வாலிபால், ஹாக்கி மற்றும் 'வுஷூ' ஆகிய ஐந்து விளையாட்டுகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.இந்த பயிற்சி முகாமில், 18 வயதிற்குட்பட்ட மாணவ - மாணவியர் பங்கேற்றுள்ளனர். தடகளம், கால்பந்து மற்றும் 'வுஷூ' ஆகிய மூன்று விளையாட்டுகள் திருவள்ளூர் மாவட்ட விளையாட்டரங்கத்தில் நடக்கிறது.ஹாக்கி விளையாட்டு, ஆவடியில் உள்ள காஸ்மோஸ் எச்.வி.எப்., மைதானத்திலும், வாலிபால் தமிழ்நாடு சிறப்பு காவல் பிரிவு, ஆவடியிலும் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்றவர்களுக்கு காலை பயிற்சி முடித்ததும், பால் மற்றும் முட்டை ஆகியவற்றை, நடைபயிற்சியாளர் சங்கத்தினர் தினமும் இலவசமாக வழங்கி வருகின்றனர். முகாம் இறுதியில், பயிற்சியில் பங்கேற்ற அனைவருக்கும் விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் சான்றிதழ் வழங்கப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி