உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / வரிசைகட்டும் கன்டெய்னர் லாரிகள் பாலத்தின் உறுதிதன்மை கேள்விக்குறி

வரிசைகட்டும் கன்டெய்னர் லாரிகள் பாலத்தின் உறுதிதன்மை கேள்விக்குறி

மீஞ்சூர்:மீஞ்சூர் அடுத்த காட்டுப்பள்ளியில், எண்ணுார் காமராஜர் துறைமுகம் மற்றும் அதானி துறைமுகம் ஆகியவை அமைந்துள்ளன. துறைமுகங்களுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் கன்டெய்னர் லாரிகள் மற்றும் கனரக வாகனங்கள், வல்லுார் - அத்திப்பட்டு புதுநகர் சாலையில் பயணிக்கின்றன.இவை, துறைமுகங்களுக்குள் செல்வதற்கு உரிய அனுமதி கிடைக்கும் வரை, இந்த சாலையோரங்களில் வரிசையாக நிறுத்தி வைக்கப்படுகின்றன. இந்த சாலையில், அத்திப்பட்டு புதுநரில் உள்ள ரயில்வே மேம்பாலத்தின் மீது கன்டெய்னர் லாரிகள் வரிசையாக நிறுத்தி வைக்கப்படுகின்றன.இந்த பாலம், 35 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. அதிக சுமையுடன் நாள் முழுதும் கன்டெய்னர் லாரிகள் பாலத்தின் மீது நிறுத்தி வைக்கப்படுவதால், பலவீனமடைய வாய்ப்புள்ளது. கன்டெய்னர் லாரிகளை பாலத்தின் மீது நிறுத்துவதை தடுக்க போக்குவரத்து போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:இந்த பாலத்தின் வழியாக துறைமுகங்களுக்கு மட்டுமின்றி எரிவாயு முனையங்கள், பெட்ரோலிய முனையங்கள், நிலக்கரி கிடங்கு, வடசென்னை அனல்மின் நிலையங்களுக்கு செல்லும் நுாற்றுக்கணக்கான லாரிகள் பயணிக்கின்றன.இந்த பாலத்தின் மீது அதிக சுமையுடன் கன்டெய்னர் லாரிகள் நிறுத்துவதை தடுப்பது அவசியமாக உள்ளது. மேலும், பாலம் பலவீனம் அடைந்தால், போக்குவரத்து ஸ்தம்பிக்கும். எனவே, போக்குவரத்து போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை