மேலும் செய்திகள்
குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி
15-Nov-2024
திருத்தணி:திருத்தணி அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில், மாவட்ட குழந்தைகள் நலம் திட்டத்தின் வாயிலாக, 'நிமிர்ந்து நில்' எனும், மாணவியருக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.இதில், திருவள்ளூர் கலெக்டர் பிரபுசங்கர், எஸ்.பி.,ஸ்ரீநிவாசா பெருமாள் ஆகியோர் பங்கேற்று, மாணவியருக்கு 'குட் டச், பேட் டச்' குறித்து விளக்கி கூறினர்.மேலும், மாணவியருக்கு பாலியல் தொந்தரவு கொடுக்கும் யாராக இருந்தாலும், காவல் நிலையத்திலும், மாவட்ட குழந்தைகள் நல அதிகாரிகளிடம் புகார் தெரிவிக்கலாம்.ஆசிரியர்கள் தவறாக கண்ணோட்டத்தில் தொடுவது, பார்ப்பது போன்ற சம்பவங்கள் இருந்தாலும், மாணவியர், போலீசார் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியையிடம் புகார் கொடுக்கலாம் என, பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தினர்.நிகழ்ச்சியில், வருவாய் கோட்டாட்சியர் தீபா, தாசில்தார் மலர்விழி, பள்ளி தலைமை ஆசிரியை கலாமணி உட்பட பலர் பங்கேற்றனர்.
15-Nov-2024