உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / மாநில பூப்பந்தாட்ட போட்டி அரசு பள்ளி மாணவர்கள் தகுதி

மாநில பூப்பந்தாட்ட போட்டி அரசு பள்ளி மாணவர்கள் தகுதி

எண்ணுார்: கத்திவாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், மாநில பூப்பந்தாட்ட போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர். பள்ளிக்கல்வித்துறை சார்பில், சென்னை மாவட்ட அளவிலான பால்பேட்மின்டன் எனும் பூப்பந்தாட்ட போட்டிகள், எண்ணுார், கத்திவாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில், கடந்த 7ம் தேதி நடந்தது. இதில், 23 அணிகள் பங்கேற்றன. அதன்படி, 19 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கான போட்டியில், கோடம்பாக்கம், ஜெய்கோபால் கரோடியா பள்ளியுடன் இறுதிப்போட்டியில் மோதிய, கத்திவாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர் அணி, 35 - 15, 35 - 30 என்ற புள்ளிக்கணக்கில் முதலிடம் பிடித்தது. அதேபோல், 17 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கான போட்டியில், போரூர், டான் பாஸ்கோ பள்ளியுடன் இறுதி போட்டியில் மோதிய, கத்திவாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர் அணி, 35 - 17, 35 - 18 என்ற புள்ளிக்கணக்கில் முதலிடம் பிடித்தது. இரு பிரிவுகளிலும் முதலிடம் பிடித்த, கத்திவாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் அணியினர், மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ