உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பத்து மாதமாகியும் புதிய ரேஷன் கார்டு கிடைக்கல

பத்து மாதமாகியும் புதிய ரேஷன் கார்டு கிடைக்கல

திருத்தணி: தாசில்தார் அலுவலகத்தில் புதிய ரேஷன் கார்டு, நகல் கார்டு கோரி விண்ணப்பித்துவர்களுக்கு 10 மாதமாகியும் 'ஸ்மார்ட்' கார்டு கிடைக்காமல் கடும் அவதிப்படுகின்றனர். திருத்தணி தாசில்தார் அலுவலகத்தில், மொத்தம், 74 வருவாய் கிராமங்கள் உள்ளன. தற்போது,70,000 ரேஷன் கார்டுதாரர்கள் உள்ளனர். இந்நிலையில், புதிதாக திருமணம் செய்து கொண்டவர்கள் புதிய ரேஷன் கார்டு கேட்டு ஆன் - லைன் மூலம் விண்ணப்பித்து உள்ளனர். மேலும், ரேஷன் கார்டுகள் தொலைந்து போனது, ஏற்கனவே இருக்கும் ரேஷன் கார்டுகளில் புகைப் படம் மாற்றம், விலாசம் மாற்றம், பெயர் திருத்தம், புதிய உறுப்பினர்கள் சேர்த்தல் போன்ற திருத்தம் பணிகளும் ஆன் - லைன் மூலம் செய்து வருகின்றனர். அந்த வகையில், ஜனவரி மாதம் முதல் கடந்த மாதம் வரை, 500 பேர் புதிய ரேஷன் கார்டு கோரி விண்ணப்பித்துள்ளனர். மேலும், மார்ச் மாதம் முதல் 150 பேர் நகல் கார்டு கோரி விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கு இதுவரை 'ஸ்மார்ட்' ரேஷன் கார்டு கிடைக்காமல் தவித்து வருகின்றனர். இதனால் அரசு நலதிட்ட உதவிகள் மற்றும் பல்வேறு சான்றுகள் பெற முடியாமல் தவிக்கின்றனர். எனவே மாவட்ட கலெக்டர் விரைந்து நடவடிக்கை எடுத்து தகுதியானவர்களுக்கு 'ஸ்மார்ட் கார்டு' வழங்க வேண்டும் என பயனாளிகள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !