மேலும் செய்திகள்
வங்கனுார் கோவிலில் உற்சவர் சிலைகள் ஒப்படைப்பு
07-Sep-2024
ஆர்.கே.பேட்டை: திருத்தணியில் இருந்து வங்கனுார் வழியாக வீரமங்கலம் கிராமத்திற்கு, அரசு பேருந்து தடம் எண்: டி 65 இயக்கப்பட்டு வருகிறது.இரண்டு மணி நேரத்திற்கு ஒரு பேருந்து வங்கனுாருக்கு வந்து செல்கிறது. வங்கனுாருக்கு இயக்கப்படும் ஒரே அரசு பேருந்து இது மட்டுமே. இந்த பேருந்து வாயிலாக, வேலைக்கு செல்பவர்கள், பள்ளி, கல்லுாரி மாணவர்கள் பயணித்து வருகின்றனர். இந்நிலையில், திருத்தணியில் இருந்து நேற்று முன்தினம் இரவு வங்கனுாருக்கு அரசு பேருந்து டி 65 வந்து கொண்டிருந்தது. வங்கனுார் பேருந்து நிலையம் அருகே வந்து கொண்டிருந்த போது, பேருந்தின் பின்புறம் இருந்து மர்மநபர்கள் கல் வீசி உள்ளனர். இதில், பேருந்தின் பின்பக்க கண்ணாடி உடைந்தது. விரைந்து வந்த ஆர்.கே.பேட்டை போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர்.
07-Sep-2024