உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / ஹிந்து மொழி எதிர்த்து மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

ஹிந்து மொழி எதிர்த்து மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

திருத்தணி:தமிழகத்தில் மும்மொழி கொள்கை எதிர்த்தும், இருமொழி கொள்கை வேண்டும் என, தமிழ்நாடு மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில், திருத்தணி அக்கைய்யநாயுடு சாலையில் உள்ள தொலைபேசி அலுவலகம் முன், ஹிந்தியை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.மாவட்ட மாணவரணி அமைப்பாளர் முரளிசேனா தலைமையில், 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்று மும்மொழி கொள்கை என்ற பெயரில் ஹிந்துயை திணித்து மீண்டும் மொழிப்போருக்கு நிர்ப்பந்திக்கும் மத்திய அரசை கண்டித்து கண்டன கோஷம் எழுப்பினர்.இதில், முஸ்லிம் மாணவரணி மாநில பொதுச் செயலர் நுார்முகமது, மஸ்தான் உட்பட பலர் பங்கேற்று, பிரதமர் மோடியை 'கெட்அவுட் மோடி' என, கண்டன கோஷம் எழுப்பினர். திருத்தணி டி.எஸ்.பி., கந்தன் தலைமையில், 30க்கும் மேற்பட்ட போலீசார், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி