மேலும் செய்திகள்
அறிவிப்போடு நிற்கும் குறுவைத்தொகுப்பு மானியம்
08-May-2025
திருத்தணி:திருத்தணி ஒன்றியத்தில், 27 ஊராட்சிகளில் 300க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. விவசாயிகளுக்கு நெல், வேர்க்கடலை, காய்கறி போன்ற பயிர்களுக்கு, வேளாண் துறையின் சார்பில் மானியம் வழங்கப்படுகிறது. கடந்த மார்ச் மாதம் வரை விதைகளுக்கு மானியம் வழங்கப்பட்டு வந்தது. அதன்பின் நெல், வேர்க்கடலை போன்ற விதைகளுக்கு மானியம் வழங்காமல், வேளாண் விரிவாக்க மையத்தில் முழு விலையில் விவசாயிகளுக்கு விதைகள் விற்பனை செய்யப்பட்டது.இதுகுறித்து நம் நாளிதழில் நேற்று முன்தினம் செய்தி வெளியானது. இதையடுத்து, மாவட்ட நிர்வாகம் நெல், வேர்க்கடலை மற்றும் சிறு தானியங்களுக்கு மீண்டும் மானியம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது.இதுகுறித்து, திருத்தணி வேளாண் துறை அதிகாரி கூறியதாவது:விதை கிராம திட்டத்தின் கீழ், கோ - 51, கோ - 55 ஆகிய ரக நெல் விதைகளுக்கு 1 கிலோவுக்கு, 17.50 ரூபாய் மானியம் வழங்கப்படுகிறது. ஒரு விவசாயிக்கு அதிகபட்சமாக, 20 கிலோ நெல்லுக்கு மானியம் வழங்கப்படுகிறது. அதேபோல் ஜிப்சம், ஜிக்சல்பேட் போன்ற உரங்களுக்கும் மானியம் வழங்கப்படும்.அதேபோல், தேசிய உணவு எண்ணெய் திட்டத்தின் கீழ் வேர்க்கடலைக்கு, 1 கிலோவுக்கு, 30 ரூபாய்க்கு மேல் மானியம் வழங்கப்படுகிறது. எனவே, நெல், வேர்க்கடலை விதைகள் தேவைப்படும் விவசாயிகள், திருத்தணி நகரம் மற்றும் கே.ஜி.கண்டிகை ஆகிய பகுதிகளில் இயங்கி வரும் வேளாண் விரிவாக்க மையத்தில் விவசாயிகள் சிட்டா, ஆதார் மற்றும் ரேஷன் கார்டு காண்பித்து, மானிய விலையில் விதைகள் பெற்றுக் கொள்ளலாம்.இவ்வாறு அவர் கூறினார்.
08-May-2025