கரும்பு அரவை துவக்கம்
திருவாலங்காடு: திருவாலங்காடில், திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலை இயங்கி வருகிறது. நடப்பாண்டிற்கான அரவை அக்டோபர் இறுதியில் துவங்கியது. தினமும் 2,000 டன் கரும்பு அரவை செய்யப்பட்டு வந்த நிலையில், பொங்கலை முன்னிட்டு கரும்பு அரவை, கடந்த 13ம் தேதி நிறுத்தப்பட்டு, பராமரிப்பு பணிகள் நடந்தன. இதையடுத்து, நேற்று மாலை 6:00 மணி முதல் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்பு அரவை துவங்கியது.