உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் /  லாரி மோதி கரும்பு டிராக்டர் கவிழ்ந்து போக்குவரத்து பாதிப்பு

 லாரி மோதி கரும்பு டிராக்டர் கவிழ்ந்து போக்குவரத்து பாதிப்பு

திருத்தணி: கரும்பு டிராக்டர் மீது லாரி மோதியதில் டிராக்டர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனால் நெடுஞ்சாலையில், போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பள்ளிப்பட்டு ஒன்றியத்தில் கரும்பு டிராக்டர் ஒன்று கரும்புகளை ஏற்றிக் கொண்டு திருவாலங்காடு கூட்டுறவு சர்க்கரை ஆலை நோக்கி நேற்று சென்று கொண்டிருந்தது. இந்த டிராக்டர் சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலை திருத்தணி அடுத்த பட்டாபிராமபுரம் பேருந்து நிறுத்தம் புதிய பைபாஸ் சாலை அருகே சென்ற போது, எதிரே வந்த லாரி டிராக்டர் மீது மோதியது. இதில் கரும்பு டிராக்டர் சாலையில் தலைகீழாக கவிழ்ந்தது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து, திருத்தணி போலீசார் மற்றும் அப்பகுதி மக்கள் பொக்லைன் மூலம் கரும்பு டிராக்டரை அப்புறப்படுத்தினர். இதனால் நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை