மேலும் செய்திகள்
திருத்தணியில் 12 பேரை கடித்து குதறிய குரங்குகள்
21-Jan-2025
திருத்தணி:திருத்தணி ஒன்றியம், சூர்யநகரம் ஊராட்சிக்குட்பட்ட ராமாபுரம் கிராமத்தில், 100க்கும் மே்ற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள், விவசாயத்தை நம்பியே உள்ளனர்.இப்பகுதியினர், தங்கள் அத்தியாவசிய பணிகள் காரணமாக, திருத்தணி பஜாருக்கு செல்ல சூர்யநகரம் வழியாக, திருத்தணி- பொதட்டூர்பேட்டை மாநில நெடுஞ்சாலைக்கு வந்து, அங்கிருந்து பேருந்துகள் வாயிலாக சென்று வருகின்றனர்.இதில் பெரும்பாலானோர், இருசக்கர வாகனங்கள் வாயிலாக திருத்தணி மற்றும் பொதட்டூர்பேட்டை மார்க்கத்திற்கு சென்று வருகின்றனர். விவசாயிகள் பயிரிடும் நெல், கரும்பு, காய்கறி மற்றும் வேர்க்கடலை போன்ற தானியங்களை டிராக்டர் மற்றும் லோடு ஆட்டோ வாயிலாக திருத்தணி நகருக்கு கொண்டு செல்கின்றனர்.இந்நிலையில், சூர்யநகரம்-- - ராமாபுரம் 3 கி.மீ., துாரம் ஒன்றிய தார்ச்சாலை அமைத்தும், ஏரி வரத்து கால்வாய் கடக்க சிறுபாலமும் அமைக்கப்பட்டுள்ளன. இச்சாலை. முறையாக பராமரிக்காததால், தற்போது பழுதடைந்து, தார்ச்சாலை, மண் சாலையாக மாறி, குண்டும், குழியுமாக மாறியுள்ளது.மேலும், சிறுபாலம் தேசம் அடைந்தும், பாலத்தில் மெகா பள்ளம் ஏற்பட்டுள்ளதால் இருசக்கர வாகன ஓட்டிகள் சிறுபாலத்தில் விபத்தில் சிக்கி தவிக்கின்றனர்.எனவே, புதிதாக பொறுப்பேற்க உள்ள கலெக்டர் விரைந்து நடவடிக்கை எடுத்து, சூர்யநகரம்- - ராமாபுரம் சாலை சீரமைக்க வேண்டும் என, அப்பகுதியினர் எதிர்பார்க்கின்றனர்.
21-Jan-2025