மேலும் செய்திகள்
டூவீலர் மீது பஸ் மோதி ஒருவர் காயம்
09-Jan-2025
திருத்தணி:திருத்தணி கச்சேரி தெரு சேர்ந்தவர் காத்தவராயன், 60. டெய்லர் . இவர், கடந்த, 12ம் தேதி மாலை, 4:00 மணிக்கு தாம்பரத்தில் இருந்து திருத்தணிக்கு வரும் தனியார் பேருந்தில் பயணம் செய்தார்.சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலை திருத்தணி அடுத்த பட்டாபிராமபுரம் பகுதியில் செல்லும் புதிய பைபாஸ் சாலை பேருந்து நிறுத்தத்தில் இறங்குவதற்கு, காத்தவராயன் படியில் நின்ற போது பேருந்து ஓட்டுனர் திடீரென பிரேக் போட்டதில், பேருந்தில் இருந்து தவறி சாலையில் விழுந்து படுகாயம் அடைந்தார். காத்தவராயன் சென்னை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். நேற்று காலை சிகிச்சை பலனின்றி காத்தவராயன் இறந்தார். திருத்தணி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
09-Jan-2025