உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / கோவிலுக்கு சொந்தமான இடம் ஆக்கிரமிப்பாளரிடம் இருந்து மீட்பு

கோவிலுக்கு சொந்தமான இடம் ஆக்கிரமிப்பாளரிடம் இருந்து மீட்பு

திருவாலங்காடு:திருத்தணி முருகன் கோவிலின் உபக்கோவிலான வடாரண்யேஸ்வரர் கோவில் திருவாலங்காடில் அமைந்துள்ளது. இக்கோவிலில், பங்குனி உத்திர விழாவின் ஏழாம் நாளில் தேர் திருவிழா விமரிசையாக நடைபெறும்.எனவே, தேர் பாதுகாப்பாக நிறுத்த காவல் நிலையம் அருகே மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. தேர் மண்டபம் அருகே, கோவிலுக்கு சொந்தமான இடத்தை, சமூக விரோதிகள் சிலர் பல ஆண்டுகளாக ஆக்கிரமித்து கடைகள் அமைத்துள்ளதாக, கோவில் நிர்வாகத்திற்கு புகார் வந்தது.திருத்தணி முருகன் கோவில் இணை ஆணையர் ரமணி உத்தரவின்படி, அதிகாரிகள் ஆக்கிரமிப்பு குறித்து ஆய்வு செய்தனர். கோவிலுக்கு சொந்தமான இடத்தில் சிலர் ஆக்கிரமித்து கடைகள் கட்டியிருப்பது தெரியவந்தது.கடந்த வாரம் ஆக்கிரமிப்பு கட்டடத்தை இடித்து அகற்ற அறநிலையத் துறை அதிகாரிகள் வந்த நிலையில், ஆக்கிரமிப்பாளர்கள் தாங்களாக அகற்றி விடுவதாக கூறினர். இதையடுத்து, நேற்று ஆக்கிரமிப்பாளர்கள் கட்டடங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.இதுகுறித்து, திருத்தணி கோவில் அதிகாரி கூறியதாவது:கோவிலுக்கு சொந்தமான இடம் மீட்கப்பட்டு உள்ளது. கடந்த காலங்களில் பங்குனி உத்திர திருவிழாவின் போது, இடநெருக்கடியால் தேர் செல்லும் போது சிரமம் ஏற்பட்டது. ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு உள்ளதால், இனி சிரமம் இருக்காது.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ