உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / கொண்டஞ்சேரி ஊராட்சி மன்றம் அலுவலகம் கட்டும் பணி ஜவ்வு 4 ஆண்டுகளாக இழுபறி

கொண்டஞ்சேரி ஊராட்சி மன்றம் அலுவலகம் கட்டும் பணி ஜவ்வு 4 ஆண்டுகளாக இழுபறி

கடம்பத்துார்:கடம்பத்துார் ஒன்றியத்துக்குட்பட்டது, கொண்டஞ்சேரி ஊராட்சி. இங்குள்ள ஊராட்சி மன்ற அலுவலகம் மிகவும் சேதமடைந்து, பயன்படுத்தாத முடியாத நிலையில் இருந்தது.இதையடுத்து, புதியதாக கட்டப்பட்ட கிராம சேவை மையத்தில் தற்போது ஊராட்சி மன்ற அலுவலகம் இயங்கி வருகிறது.இந்நிலையில், கிளை நுாலகம் அருகே, ஒன்றிய நிர்வாகம் சார்பில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ், 23 லட்ச ரூபாயில் ஊராட்சி மன்ற அலுவலகம் புதிததாக கட்டும் பணி, 2020, அக்டோபரில் துவங்கியது. இந்த பணிகளை மூன்று மாதத்தில் நிறைவேற்ற திட்டமிட்டுள்ளதாக ஒன்றிய அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால், தற்போது நான்காண்டுகளாகியும் பணிகள் நிறைவடையாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது, இப்பகுதிவாசிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அதிகாரிகள் அலட்சியத்தால் மக்களின் வரிப்பணம் வீணாவதாகவும், பகுதிவாசிகள் குற்றம் சாட்டுகின்றனர்.எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் புதிய ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டும் பணியை ஆய்வு செய்து, விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென, கொண்டஞ்சேரி பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ