மேலும் செய்திகள்
போஸ்டர் ஓட்டும் இடமான இருளஞ்சேரி நிழற்குடை
05-Apr-2025
இருளஞ்சேரி:கடம்பத்துார் ஒன்றியம் பேரம்பாக்கம் அருகே நரசிங்கபுரம் அமைந்துள்ளது. இப்பகுதியில் உள்ள கூவம் ஏரியிலிருந்து வெளியேறும் உபரி நீர், இருளஞ்சேரி, குமாரசேரி, கொண்டஞ்சேரி வழியாக, சத்தரை கிராம பகுதியில், கூவம் ஆற்றில் கலக்கும் வகையில் நீர்வரத்து இணைப்பு கால்வாய் உள்ளது.இந்த நீர்வரத்து இணைப்பு கால்வாய், பல இடங்களில் ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கியுள்ளது. மேலும், தண்டலம் - -அரக்கோணம் நெடுஞ்சாலையில், இருளஞ்சேரி பகுதியில் இணைப்பு கால்வாய் ஆக்கிரமிக்கப்பட்டு, நெல் பயிரிடப்பட்டு வருகிறது. இதனால், கூவம் ஆற்றுக்கு நீர் வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே, மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்து, கூவம் ஆற்றிற்கு செல்லும் இணைப்பு கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்றி, சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
05-Apr-2025