உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / மாயமாகும் சுகாதார வளாகம் அரசு பணம் வீணடிப்பு

மாயமாகும் சுகாதார வளாகம் அரசு பணம் வீணடிப்பு

திருத்தணி:பூனிமாங்காடு காலனியில் பராமரிப்பின்றி மகளிர் சுகாதார வளாகம் உள்ளதால், அரசு பணம் வீணாகிறது.திருவாலங்காடு ஒன்றியம் பூனிமாங்காடு காலனி பகுதியில், 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி பெண்களின் நலன் கருதி, ஊராட்சி நிர்வாகம் சார்பில் 10 ஆண்டுகளுக்கு முன், 15 லட்சம் ரூபாய் மதிப்பில் மகளிர் சுகாதார வளாகம் கட்டி பயன்பாட்டிற்கு விடப்பட்டது.இப்பகுதி பெண்கள் மகளிர் சுகாதார வளாகத்தை பயன்படுத்தி வந்த நிலையில், ஊராட்சி நிர்வாகம் முறையாக பராமரிக்காததால், துர்நாற்றம் வீசியது. இதனால், அப்பகுதி பெண்கள் சுகாதாரம் செல்வதை தவிர்த்து வந்தனர்.தற்போது, சுகாதார வளாகத்தை சுற்றி செடிகள் வளர்ந்து மாயமாகி வருகிறது. ஆண்டுதோறும் ஊராட்சி நிர்வாகம், மகளிர் சுகாதார வளாகம் பராமரிப்பு பணிக்கு என, கணிசமான தொகையை எடுத்துக் கொள்கிறது. இதனால், அரசு பணம் வீணாகிறது.எனவே, மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்து, செடிகள் வளர்ந்துள்ள மகளிர் சுகாதார வளாகத்தை சீரமைத்து, மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி பெண்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ