உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / இடிந்து விழும் நிலையில் தீயணைப்பு நிலைய சுவர்

இடிந்து விழும் நிலையில் தீயணைப்பு நிலைய சுவர்

கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி ரெட்டம்பேடு சாலையில், போலீஸ் நிலையம் அருகே தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையம் இயங்கி வருகிறது. ஆறு ஆண்டுகளுக்கு முன், தீயணைப்பு நிலையத்தின், மேற்கு பக்க மதில் சுவர், இடிந்து விழுந்தது. அதனால் முகப்பு சுவர், பிடிமானம் இன்றி இருந்தது. இதனால், இரண்டு ஆண்டுகளுக்கு முன், முகப்பு சுவர் பலம் இழந்து சாய துவங்கியது.தற்போது எந்த நேரத்திலும் இடிந்து விழும் நிலையில் அந்த சுவர் உள்ளது. தீயணைப்பு நிலையத்தை சுற்றி புதிதாக மதில் சுவர் அமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை