உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / தங்கும் இடமாக மாறிய நுாலகம் மீட்கப்பட்டு பயன்பாட்டிற்கு வந்தது

தங்கும் இடமாக மாறிய நுாலகம் மீட்கப்பட்டு பயன்பாட்டிற்கு வந்தது

திருவள்ளூர்,திருவள்ளூர் மாவட்டத்தில், 14 ஒன்றியங்களில் 526 ஊராட்சிகளில் உள்ள 526 நுாலங்களில் தலா ஒரு லட்சம் வீதம், 5.26 கோடி ரூபாய் மதிப்பில் சீரமைக்க முடிவு செய்யப்பட்டது.இதில் 2021-22ம் ஆண்டு 152 நுாலகங்கள், 2022-23ம் ஆண்டில் 152நுால்கள் மீதமுள்ள நுாலகங்கள் புதுப்பிக்கப் பட்டன. மீதமுள்ளவை 2023-24ம் ஆண்டில் புதுப்பிக்கும் பணி நடந்துவருகிறது.ஓராண்டுக்கு முன் கடம்பத்தூர் ஒன்றியம் உளுந்தை ஊராட்சியில் 1.40 லட்சம் ரூபாய் மதிப்பில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் கிளை நுாலகம் புதுப்பிக்கப்பட்டது. ஆனால் பயன்பாட்டிற்கு வரவில்லை.இதனால், ஊராட்சிபகுதியில் இருளர் இனமக்களுக்காக அரசின்இலவச வீடு கட்டும் கட்டுமான பணியில் ஈடுப்பட்டு வந்த வட மாநிலத்தவர்கள்இந்த நுாலகத்தில் தங்கி சமையல் செய்து சாப்பிட்டு, கட்டுமான பணி செய்து வந்தனர். இது இப்பகுதிவாசிகளிடையே அதிருப்தியைஏற்படுத்தியுள்ளது. எனவே சம்பந்தப்பட்டஅதிகாரிகள் ஆய்வு செய்து நுாலகரை நியமித்துசீரமைக்கப்பட்ட கிளை நுாலகத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென கோரிக்கைவிடுத்துள்ளனர்.இந்நிலையில், நுாலகத்தில் தங்கியிருந்து கட்ட வேலையில் ஈடுப்பட்ட வடமாநிலத்தவர்கள் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டனர். தற்போது நுாலகர் நியமிக்கப்பட்டு, நேற்று முதல் வாசகர்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.இதுகுறித்து கடம்பத்துார்ஒன்றிய அலுவலர் செல்வகுமார் கூறியதாவது:வடமாநிலத்தவர் ஆக்கிரமிப்பில் கிளை நுாலகம் உள்ளதாக வந்த தகவலையடுத்து உளுந்தை ஊராட்சி நுாலகம் ஆய்வு செய்யப் பட்டது.அங்கு தங்கியிருந்த வடமாநிலத்தவர் வெளியேற்றப்பட்டு கிளை நுாலகம் சீரமைக்கப்பட்டது. இதே பகுதியைச் சேர்ந்த செந்தில்,42 என்பவர் நுாலகராக நியமிக்கப்பட்டு வாசகர்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.இவ்வாறு அவர்கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ