பிரியாணி மாஸ்டரை தாக்கியவருக்கு வலை
திருத்தணி: திருத்தணி, ஆச்சாரி நேரு தெருவைச் சேர்ந்தவர் தணிகாசலம், 34. இவர், திருத்தணியில் உள்ள ஒரு பிரியாணி கடையில், மாஸ்டராக பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் தணிகாசலம், நேரு நகர் பள்ளிக்கூட தெருவில் பிரியாணி தயாரித்துக் கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த நியாஷ், 23, என்பவர் மதுபோதையில், ரஷீத் என்ற வாலிபருடன் தகராறு செய்துள்ளார். அப்போது நியாஷ் ஓடி வந்து,'எதற்காக வேடிக்கை பார்க்கிறாய்' எனக் கூறி தணிகாசலத்தை, அங்கிருந்த பிரியாணி கரண்டியால் தலையில் தாக்கிவிட்டு தப்பிச் சென்றார். தணிகாசலத்தை திருத்தணி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். திருத்தணி போலீசார் நியாஷை தேடி வருகின்றனர்.