உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / மாங்காடு சாலை படுமோசம்

மாங்காடு சாலை படுமோசம்

பூந்தமல்லி:பூந்தமல்லியிலிருந்து மாங்காடு செல்லும் லட்சுமிபுரம் சாலை படுமோசமாக உள்ளதால், வாகன ஓட்டிகள் அச்சத்துடன் பயணித்து வருகின்றனர். பூந்தமல்லி நகராட்சியில், லட்சுமி புரம் பிரதான சாலை உள்ளது. இந்த சாலை, மாங்காடு மற்றும் நசரத்பேட்டை பகுதிகளை இணைக்கிறது. குண்டும் குழியுமாக இருந்த இந்த சாலை, கடந்த ஆண்டு தார்ச்சாலையாக நகராட்சி நிர்வாகம் அமைத்தது. தரமற்ற முறையில் நடந்த சாலை பணியால், சில மாதங்களிலேயே மீண்டும் சேதமாகி ஆங்காங்கே பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் சாலை இருப்பதால், காலை மற்றும் மாலை நேரங்களில், பள்ளி குழந்தைகளை இருசக்கர வாகனத்தில் அழைத்துச் செல்லும் பெற்றோர், விபத்து அபாயத்திலேயே செல்கின்றனர். எனவே, பூந்தமல்லி நகராட்சி நிர்வாகத்தினர், இந்த சாலையை தரமானதாக அமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை