உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / மயங்கி விழுந்த ஊராட்சி செயலர் பலி

மயங்கி விழுந்த ஊராட்சி செயலர் பலி

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று மதியம் 3:00 மணியளவில் மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை மற்றும் ஊராட்சித்துறை அலுவலகத்தில் நேற்று மாலை திட்ட இயக்குனர் ஜெயக்குமார் தலைமையில் ஊராட்சி செயலர்களுக்கான கலந்தாய்வு கூட்டம் நடைபெற இருந்தது.திருத்தணி வட்டம் மத்துார் ஊராட்சி செயலர் வெங்கடேசன், 57 என்பவர் கூட்ட அரங்கில் இருந்த போது, திடீரென்று மயங்கி கீழே விழுந்தார். இதையடுத்து அவரை 108 ஆம்புலன்ஸ் வாயிலாக திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ