மேலும் செய்திகள்
குடியிருப்பு பகுதியில் எலும்புக்கூடான மின்கம்பம்
23-Jan-2025
கடம்பத்துார்:கடம்பத்துார் ஒன்றியம், வெங்கத்துார் ஊராட்சிக்குட்பட்ட மணவாள நகர் பகுதியில், 20க்கும் மேற்பட்ட நகர்களில், 200க்கும் மேற்பட்ட தெருக்களில், 40,000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.இப்பகுதியில் தெரு நாய்களை கட்டப்படுத்த ஒன்றிய நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளாததால் நாய்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்து விட்டது.தெருக்களில் சுற்றித்திரியும் நாய்களால் அரசு பள்ளிக்கு வரும் மாணவ - மாணவியர் மற்றும் பகுதிவாசிகள் அச்சத்தில் உள்ளனர். இருசக்கர வாகனங்களில் செல்வோரை தெரு நாய்கள் துரத்துவதால் சில நேரங்களில் விபத்தில் சிக்கும் நிலையும் ஏற்படுகிறது.எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நாய்களை கட்டுப்படுத்த தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
23-Jan-2025