உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / 12 ஆண்டாக பஸ் வசதியில்லாததால் விடியங்காடு மக்கள் கடும் அவஸ்தை

12 ஆண்டாக பஸ் வசதியில்லாததால் விடியங்காடு மக்கள் கடும் அவஸ்தை

ஆர்.கே.பேட்டை:ஆர்.கே.பேட்டையில் இருந்து சோளிங்கர் வழியாக வள்ளிமலை செல்லும் மார்க்கத்தில் விடியங்காடு கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில், 400 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.விடியங்காடு மற்றும் விடியங்காடு ஊராட்சிக்குட்பட்ட புதுார் மேடு, வெங்கடாபுரம், தாமரைகுளம், வேணுகோபாலபுரம் உள்ளிட்ட பகுதியைச் சேர்ந்தோர், அத்தியாவசிய பணிகளுக்காக தினமும் ஆர்.கே.பேட்டை மற்றும் சோளிங்கருக்கு பயணிக்கின்றனர்.ஆனால், இந்த மார்க்கத்தில் சோளிங்கரில் இருந்து வள்ளிமலைக்கு இயக்கப்பட்டு வந்த தடம் எண்: 50 என்ற ஒரேயொரு அரசு பேருந்தும், 12 ஆண்டுகளுக்கு முன் நிறுத்தப்பட்டது. இதனால் பெண்கள், முதியவர்கள், மாணவர்கள் என, பல்வேறு தரப்பினரும் அவதிப்பட்டு வருகின்றனர்.பள்ளிப்பட்டில் இருந்து ஆர்.கே.பேட்டை வழியாக நாகபூண்டி வரை இயக்கப்படும் தடம் எண்: டி 52 என்ற அரசு பேருந்தை, 6 கி.மீ., துாரம் நீட்டித்து, விடியங்காடு வரை இயக்க வேண்டும் அல்லது இந்த மார்க்கத்தில் சோளிங்கர் வழியாக ஆர்.கே.பேட்டை வரை புதிய பேருந்து இயக்க வேண்டும் என, பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை