வாலிபரை தாக்கியவர் கைது
திருவள்ளூர்:திருவள்ளூர் அடுத்த காக்களூர் வெம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் இளையரசன், 31. இவர் கடந்த 20ம் தேதி இரவு உறவினர்களுடன் அருகில் உள்ள அரசு மதுபானக் கடைக்கு சென்றார். அப்போது அங்கு பெரிய இடப்பாளையம் பகுதியைச் சேர்ந்த கார்த்திக், 26 மற்றும் அவரது நண்பர் கிஷோருடன் சேர்ந்து இரு சக்கர வாகனத்தை நிறுத்தும்போது இளையரசனுடன் தகராறு ஏற்பட்டது இதில் இருவரும் இளையரசனை ஆபாசமாக பேசி தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். இதுகுறித்த புகாரின்படி வழக்கு பதிந்த திருவள்ளூர் நகர போலீசார் கார்த்திக்கை கைது செய்தனர். கிஷோரை தேடி வருகின்றனர்.