உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பயன்பாட்டிற்கு வந்தது சுரங்கப்பாதை

பயன்பாட்டிற்கு வந்தது சுரங்கப்பாதை

பள்ளிப்பட்டு:திருவள்ளூர் மாவட்டம், தச்சூரில் இருந்து பள்ளிப்பட்டு வழியாக ஆந்திர மாநிலம், சித்துாருக்கு ஆறுவழி சாலை அமைக்கப்பட்டு வருகிறது.இந்த சாலை எண்ணூர் துறைமுகத்தில் இருந்து சித்துார் வழியாக கர்நாடக மாநிலம் பெங்களூருவுக்கு சரக்குகளை விரைவாக கையாளுவதற்கான சாலையாக அமைக்கப்பட்டு வருகிறது.இதில், பள்ளிப்பட்டு அருகே சொரக்காய்பேட்டைக்கு செல்லும் மாநில நெடுஞ்சாலையில், ஆறுவழி சாலை குறுக்கிடும் பகுதியில் சுரங்கப்பாதை அமைக்கும் பணி ஆறு மாதங்களாக நடந்து வந்தன. பணிகள் நிறைவடைந்த நிலையில், இரு நாட்களுக்கு முன் பயன்பாட்டிற்கு விடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !