உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பாதியில் நின்ற அரசு பேருந்து தள்ளி ஸ்டார்ட் செய்த அவலம்

பாதியில் நின்ற அரசு பேருந்து தள்ளி ஸ்டார்ட் செய்த அவலம்

திருவாலங்காடு:திருத்தணியில் இருந்து திருவள்ளூர் நோக்கி சென்ற அரசு பேருந்து, கனகம்மாசத்திரம் பஜாரில் பழுதாகி நின்றதால், பயணியர் பேருந்தை தள்ளிச் சென்றனர். திருவள்ளூரில் இருந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு, தினமும் நுாற்றுக்கணக்கான பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அவ்வாறு இயக்கப்படும் அரசு பேருந்துகள் பழுதாகியும், டயர் பஞ்சராகியும் நடுவழியில் நிற்பது அடிக்கடி நடப்பதால், பயணியர் சிரமத்திற்கு ஆளாகின்றனர். நேற்று காலை 10:30 மணிக்கு திருத்தணியில் இருந்து திருவள்ளூர் சென்ற தடம் எண்: 97 அரசு பேருந்து கனகம்மாசத்திரம் பஜாரில் பழுதாகி நின்றது. பேருந்தில் 40 பயணியர் பயணம் செய்தனர். உடனடியாக, பயணியர் இறங்கி பேருந்தை தள்ளினர். பின், சிறிது துாரம் சென்றதும் பேருந்து ஸ்டார்ட் ஆனது. எனவே, அரசு பேருந்துகளை முறையாக பழுது நீக்க வேண்டும் என, பயணியர் வலியுறுத்தி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை