உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / திருத்தணி அரசு போக்குவரத்து பணிமனை சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து சேதம்

திருத்தணி அரசு போக்குவரத்து பணிமனை சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து சேதம்

திருத்தணி:திருத்தணி அரசு போக்குவரத்து பணிமனையின் சுற்றுச்சுவர் திடீரென இடிந்து விழுந்தது.திருத்தணி - அரக்கோணம் மாநில நெடுஞ்சாலை எம்.ஜி.ஆர்., நகர் பகுதியில் அரசு போக்குவரத்து பணிமனை இயங்கி வருகிறது. இந்த பேருந்து நிலையத்தில் 84 பேருந்துகள் உள்ளன. திருச்சி, புதுச்சேரி, சென்னை, திருப்பதி, வேலுார், சித்துார் உள்பட பல்வேறு வெளிமாவட்டங்களுக்கு தினமும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதுதவிர, திருத்தணி நகரம் சுற்றியுள்ள பள்ளிப்பட்டு, நகரி, பொதட்டூர்பேட்டை, மேட்டுகுன்னத்துார், திருவள்ளூர், சோளிங்கர், ஆர்.கே.பேட்டை, வங்கனுார் போன்ற புறநகர்களுக்கு, 30க்கும் மேற்பட்ட நகர பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. 500க்கும் மேற்பட்ட போக்குவரத்து ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.பணிமனை சுற்றி சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டுள்ளன. நேற்று காலை பேருந்து நுழைவாயில் பகுதியில் இருந்து, 50 மீட்டர் நீளத்திற்கு மேல் சுற்றுச்சுவர் திடீரென இடிந்து விழுந்தது. இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடத்தில் சுவர் இடிந்து விழுந்ததால், வாகனங்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது. சேதமடைந்த சுற்றுச்சுவரை சீரமைக்க வேண்டும் என, போக்குவரத்து தொழிலாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் எதிர்பார்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை