மேலும் செய்திகள்
முருகன் கோயில்களில் கந்த சஷ்டி விழா துவக்கம்
23-Oct-2025
பொன்னேரி: கந்தசஷ்டியை முன்னிட்டு, திரு வேங்கிடபுரம் முருக பெருமானுக்கு, திருக்கல்யாண வைபவம் விமரிசையாக நடந்தது. பொன்னேரி அடுத்த திருவேங்கிடபுரத்தில், பிரசித்தி பெற்ற பொன்னியம்மன் கோவில் வளாகத்தில், முருக பெருமான் சன்னிதி உள்ளது. கடந்த, 21ல் கந்த சஷ்டி விழா துவங்கி 27ல் நிறைவு பெற்றது. சஷ்டியை முன்னிட்டு முருக பெருமான் சன்னிதியில் லட்சார்ச்சனை நடந்தது. நேற்று முன்தினம் மாலை, வள்ளி, தெய்வானை, முருக பெருமானுக்கு திருக்கல்யாண வைபவம் மங்கள இசையுடன் துவங்கியது. திருமண மேடையில் வள்ளி,தெய்வானை சமேதராய் முருக பெருமான் வீற்றிருந்தார். இரவு, 8:00 மணிக்கு, சிவாச்சாரியர்கள் வேத மந்திரங்கள் ஓத. மங்கள வாத்தியங்கள் முழங்க, மாங்கல்யம் சாற்றி திருக்கல்யாண வைபவம் விமரிசையாக நடந்தது.
23-Oct-2025