உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / வருவாய் துறை அலட்சியத்தால் குப்பை கொட்டும் இடமான கிணறு

வருவாய் துறை அலட்சியத்தால் குப்பை கொட்டும் இடமான கிணறு

திருவாலங்காடு:திருவாலங்காடு ஊராட்சி பாஞ்சாலி நகரில், 40க்கும் மேற்பட்ட இருளர் குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்கு, கோவில் சாலையை ஒட்டி பழமையான கிணறு உள்ளது. இந்த கிணறு, 10 ஆண்டுகளாக பயன்பாடின்றி பாழடைந்து உள்ளது.அப்பகுதியில் சேகரமாகும் குப்பை கழிவுகள், இந்த பாழடைந்த கிணற்றில் கொட்டப்பட்டு வருகிறது. குடியிருப்பு அருகே உள்ள கிணற்றில் குழந்தைகள் விளையாடும் போது தவறி விழும் நிலை உள்ளது. மேலும், சாலையை ஒட்டி அமைந்துள்ளதால், வாகனத்தில் வருவோர் விபத்தில் சிக்கினால் உயிர்பலி எற்படும் அபாயமும் உள்ளது. இதுதொடர்பாக, திருத்தணி வருவாய் துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும், தற்போது வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் மெத்தனமாக இருப்பதாக, பகுதிவாசிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.எனவே, அசம்பாவிதம் ஏற்படும் முன், பாழடைந்த கிணற்றை மூட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ