சல்லடையான துராபள்ளம் பஜார் சாலை
கும்மிடிப்பூண்டி:சென்னை -- கோல்கட்டா தேசிய நெடுஞ்சாலையோரம், கும்மிடிப்பூண்டி அடுத்த, எளாவூர் அருகே, துராபள்ளம் பஜார் சாலை உள்ளது. அந்த சாலையில், வங்கிகள், பள்ளிகள், கோவில்கள், மசூதி, மீன் மார்க்கெட் மற்றும், 200க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன.சுற்றியுள்ள, 30க்கும் மேற்பட்ட கிராமத்தினரின் சந்தை பகுதியாக உள்ளது. அப்பகுதியில் தேசிய நெடுஞ்சாலையின் மேம்பாலம் செல்கிறது. சில மாதங்களாக மேம்பாலம் மற்றும் துராபள்ளம் பஜார் பகுதி சாலை விரிவாக்கம் செய்யும் பணிகளை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மேற்கொண்டு வருகின்றனர். துராபள்ளம் பஜார் சாலை பகுதியில், மக்கள் சென்று வர, மாற்று சாலை ஏற்படுத்தாமல், பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சில தினங்களாக பெய்த கனமழையில், துராபள்ளம் பஜார் சாலை முழுதும் ஏராளமான பள்ளங்கள் ஏற்பட்டு, அதில் மழைநீரும், சகதியுமாக உள்ளது.எனவே, அந்த சாலையை புதுப்பிக்க வேண்டும் என, பகுதிவாசிகள் எதிர்ப்பார்க்கின்றனர்.