மேலும் செய்திகள்
மகள் மாயம் தாய் புகார்
11-Jul-2025
பெரியபாளையம்:வெங்கல் அடுத்த, அம்மணம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் காளிதாஸ். இவரது மனைவி அமுல், 40. தம்பதியின் மகள் மீனா, 21. பி.காம்., படித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார். கடந்த, 7ம் தேதி வீட்டில் இருந்த மீனாவை திடீரென காணவில்லை. உறவினர்கள், தோழிகள் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து மீனாவின் தாய் அமுல், வெங்கல் காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குப் பதிந்து, மீனாவை தேடி வருகின்றனர்.
11-Jul-2025