உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / மின்மாற்றிக்கு செல்லும் அலுமினிய ஓயர் திருட்டு

மின்மாற்றிக்கு செல்லும் அலுமினிய ஓயர் திருட்டு

திருத்தணி:திருத்தணி அடுத்த, வேலஞ்சேரி ஏரிப்பகுதியில் மின்வாரிய துறையினர் மின்மாற்றி அமைத்து, அங்கிருந்து விவசாய கிணறுகளுக்கு மின்இணைப்பு வழங்கப்பட்டுள்ளன.இந்நிலையில், திருத்தணி மின்வாரிய ஊரக பிரிவு, இளநிலை பொறியாளர் கேசவன், 40, என்பவர், மின்மாற்றியை ஆய்வு செய்ய சென்ற போது, அங்கு மின்மாற்றி வழங்கப்பட்டிருந்த, 1,500 மீட்டர் அலுமினிய மின்ஒயரை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது. மின்ஒயர் மதிப்பு, 90 ஆயிரம் ரூபாய் என, மின்வாரிய தரப்பில் கூறப்படுகிறது.இதுகுறித்து, இளநிலை பொறியாளர் கேசவன் அளித்த புகாரையடுத்து, திருத்தணி போலீசார் வழக்கு பதிந்து, மின்ஒயரை திருடிய நபர்களை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி