பேருந்து நிறுத்தம் இருக்கு...! பயணியர் நிழற்குடை எங்கே?
திருவாலங்காடு, :திருவாலங்காடு அம்பேத்கர் நகரில் உள்ள பேருந்து நிறுத்தத்தில், நிழற்குடை அமைக்காததால் பயணியர் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். திருவள்ளூர் -- அரக்கோணம் மாநில நெடுஞ்சாலையில், திருவாலங்காடு அம்பேத்கர் நகர் அமைந்துள்ளது. இங்கிருந்து, அரக்கோணம் மற்றும் திருவள்ளூருக்கு பள்ளி, கல்லுாரி மாணவ ---- மாணவியர் மற்றும் பயணியர் என, தினமும் 1,500க்கும் மேற்பட்டோர் சென்று வருகின்றனர். இங்குள்ள பயணியர் நிழற்குடை, ௧௦ ஆண்டுகளுக்கு முன் சேதமடைந்ததது. அதன்பின் சீரமைக்காததால், பயணியர் மழை மற்றும் வெயிலில் நின்று அவதிப்பட்டு வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து, நெடுஞ்சாலையோரம் உள்ள அம்பேதகர் நகரில் நிழற்குடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.