மேலும் செய்திகள்
அங்காள பரமேஸ்வரி அம்மன் தரிசனம்
26-Jun-2025
திருத்தணி:ஆடி அமாவாசையை ஒட்டி அங்காள பரமேஸ்வரியம்மன் கோவிலில் திருக்கல்யாண உத்சவ விழா நடந்தது. திருத்தணி பழைய பஜார் தெருவில் பழமையான அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் அமைந்துள்ளது. நேற்று ஆடி மாத அமாவாசை ஒட்டி காலை 8:00 மணிக்கு மூலவர் அம்மனுக்கு பால் அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்தன. தொடர்ந்து காலை 9:30 மணிக்கு கோவில் அருகே உற்சவர் மூர்த்தியான உமாமகேஷ்வரன், அங்காள பரமேஸ்வரி அம்மன் திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடந்தது. இதில் திருத்தணி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்துக் கொண்டு வழிப்பட்டனர். மாலை உற்சவர் ஊஞ்சல் சேவையும், இரவு சிறப்பு அலங்காரத்தில் அம்மன் திருவீதியுலா நடைப்பெற்றது.
26-Jun-2025