உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / திருமழிசை பேரூராட்சி செயல் அலுவலர் ஓய்வு பெறும் நாளில் பணியிடை நீக்கம்

திருமழிசை பேரூராட்சி செயல் அலுவலர் ஓய்வு பெறும் நாளில் பணியிடை நீக்கம்

திருமழிசை, திருவள்ளூர் மாவட்டம் திருமழிசை பேரூராட்சி அலுவலகத்தில் பணிபுரிந்து வந்தவர் வெங்கடேஷ், 60.செயல் அலுவலராக பணிபுரிந்து வந்த இவர், கடந்த 29ம் தேதி பணியில் இருந்து ஓய்வு பெறும் நிலையில் இருந்தார். இதற்கு முன், தஞ்சாவூர் மாவட்டம் ஆடுதுறை, வேலுார் மாவட்டம் கலவை, திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை ஆகிய பேரூராட்சிகளில் செயல் அலுவலராக பணிபுரிந்து வந்தார்.இந்நிலையில், செயல் அலுவலர் வெங்கடேஷ், தன் பணிக்காலத்தில் திருமழிசை பேரூராட்சியில் குடிநீர், வரி வசூல் செய்வதில் முறையாக நடைமுறையை பின்பற்றவில்லை என்ற புகார் எழுந்தது.இதுகுறித்து நடந்த விசாரணையின்படி, செயல் அலுவலர் வெங்கடேஷ் பணியிடை நீக்கம் செய்யப்படுவதாக, பேரூராட்சி பணிகள் இயக்குநர் கிரன்குர்லா உத்தரவிட்டு அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.இதற்கான உத்தரவு, திருவள்ளூர் மாவட்ட பேரூராட்சிகள் உதவி இயக்குநர் திருமழிசை பேரூராட்சி செயல் அலுவலர் வெங்கடேஷிடம் அளிக்கப்பட்டது. பணி ஓய்வு பெறும் போது பணி நீக்கம் செய்யப்படுவது, அரசு அலுவலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை