உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / சாலையில் உலா வரும் மாடுகள் திருத்தணி ஆணையர் எச்சரிக்கை

சாலையில் உலா வரும் மாடுகள் திருத்தணி ஆணையர் எச்சரிக்கை

திருத்தணி:திருத்தணி நகராட்சியில், அரக்கோணம் சாலை, பேருந்து நிலையம், சன்னதி தெரு, காந்திரோடு, சித்துார் சாலை, அக்கைய்ய நாயுடு சாலை, பைபாஸ் சாலை மற்றும் ம.பொ.சி.சாலை ஆகிய இடங்களில் அதிகளவில் வாகனங்கள் சென்று வருகின்றன.இந்த இடங்களில் அதிகளவில் கால்நடைகள் சுற்றித் திரிகின்றன. இதனால், வாகன ஓட்டிகள் அடிக்கடி கால்நடைகள் மீது மோதி விபத்தில் சிக்கி, காயமடைந்து வருகின்றனர். குறிப்பாக, இருசக்கர வாகன ஓட்டிகள் சாலையில் சுற்றித் திரியும் மாடுகள் மீது மோதுகின்றனர். சில நேரங்களில் உயிரிழப்பு ஏற்படுகின்றன.இதை தொடர்ந்து, மாவட்ட நிர்வாகம் கால்நடைகளை பிடிப்பதற்காக தனிக்குழு அமைத்தும், சாலையில் சுற்றித் திரியும் கால்நடைகளை பறிமுதல் செய்யும் பணியும் நடந்து வருகிறது. இருப்பினும், திருத்தணி நகரத்தில் நாளுக்கு நாள் கால்நடைகள் அதிகளவில் சுற்றித் திரிகின்றன.இதுகுறித்து திருத்தணி நகராட்சி ஆணையர் பாலசுப்பிரமணியம் கூறியதாவது:திருத்தணி நகராட்சியில் கால்நடை வளர்ப்போருக்கு, சாலையில் மாடுகளை விடக்கூடாது என, ஏற்கனவே எச்சரிக்கை 'நோட்டீஸ்' வழங்கி அறிவுறுத்தியுள்ளோம். இருப்பினும், சிலர் மாடுகளை சாலையில் விடுகின்றனர். இனிமேல் சாலையில் சுற்றித் திரியும் மாடுகளை பறிமுதல் செய்வதோடு, அபராதம் வசூலிக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ