உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / லாரி ஓட்டுநரை தாக்கி பணம் பறிப்பு மூவருக்கு மாவுக்கட்டு

லாரி ஓட்டுநரை தாக்கி பணம் பறிப்பு மூவருக்கு மாவுக்கட்டு

கடம்பத்துார்;லாரி ஓட்டுநரை தாக்கி பணம் பறித்த வழக்கில், மூவரை போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர். திருவண்ணாமலை மாவட்ட ம் சோனாலுாரைச் சேர்ந்தவர் பாலச்சந்தர், 39; லாரி ஓட்டுநர். இவர், நேற்று முன்தினம் லாரியில் விவசாய பொருளை ஏற்றிக் கொண்டு, காஞ்சி புரம் நோக்கி சென்று கொண்டிருந்தார். கடம்பத்துார் அடுத்த அகரம் அருகே, லாரியை நிறுத்தி இயற்கை உபாதை கழிக்க சென்றார். அப்போது, அவ் வழியே வந்த மூவர், கத்தியை காட்டி மிரட்டி, பாலச்சந்தரிடம் 1,900 ரூபாயை பறித்து சென்றனர். இதுகுறித்த புகாரின்படி வழக்கு பதிந்த கடம்பத்துார் போலீசார், பிஞ்சிவாக்கம் கூவம் ஆறு அருகே பதுங்கியிருந்த கடம்பத்துாரைச் சேர்ந்த சுணால் என்ற கோட்டீஸ்வரன், 25, சுபாஷ், 24, நாகராஜ், 25, ஆகியோ ரை நேற்று காலை பிடிக்க முயன்றனர். அப்போது கூவம் ஆற்று மேம்பா லத்தில் இருந்து கீழே குதித்ததில், மூன்று பேருக்கும் எலும்பு முறிவு ஏற்பட்டது. மூவரையும் கைது செய்த போலீசார், திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின், திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, புழல் சிறை யில் அடைத்தனர். இவர்களில், சுணால் மற்றும் நாகராஜ் மீது கொலை, கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரியவந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை