உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / குட்கா பதுக்கி வைத்து விற்ற மூவர் சிக்கினர்

குட்கா பதுக்கி வைத்து விற்ற மூவர் சிக்கினர்

பொன்னேரி, செப். 29– பொன்னேரி அருகே, குட்கா பொருட்களை பதுக்கி வைத்து விற்பனையில் ஈடுபட்ட மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். பொன்னேரி நகரப்பகுதிகளில் குட்கா புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக வந்த தகவலின்படி, போலீசார் நேற்று பெட்டிக்கடைகளில் சோதனை செய்தனர். பொன்னேரி, பாலாஜி நகரில் உள்ள கடை ஒன்றில் சோதனை செய்தபோது, அங்கு குட்கா புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவது தொந்தது. தொடர்ந்து, கடைக்கு அருகில் உள்ள வீட்டில் சோதனை செய்தபோது, அங்கு எட்டு மூட்டைகளில், 52 கிலோ புகையிலை பொருட்கள் இருப்பதும் தெரிந்தது. அதையடுத்து, அவற்றை கைப்பற்றிய போலீசார், வழக்கு பதிந்து, குட்கா புகையிலை பொருட்களை வீட்டில் பதுக்கி வைத்து விற்பனையில் ஈடுபட்டு வந்த, பொன்னேரியை சேர்ந்த சரவணன், 43, வேதமுத்து, 45, சதிஷ், 43, ஆகியோரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ