உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பைக் திருடிய மூவர் கைது

பைக் திருடிய மூவர் கைது

திருத்தணி:திருத்தணி மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் வீடுகள் முன் நிறுத்தப்படும் இருசக்கர வாகனங்கள் அதிகளவில் திருடப்பட்டு வந்தது. திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி.,யின் சிறப்பு தனிப்படை போலீசார் திருத்தணி பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.நேற்று முன்தினம் இரவு தனிப்படை போலீசார் திருத்தணி - அரக்கோணம் சாலை வள்ளியம்மாபுரம் பகுதியில் வாகன சோதனை நடத்தினர். அப்போது ஒரே இரு சக்கர வாகனத்தில் மூன்று வாலிபர்கள் அதிக வேகத்தில் வந்தனர். போலீசார் வாகனத்தை நிறுத்தி விசாரணை நடத்தினர். இவர்கள் வந்த வாகனம் திருட்டு வாகனம், அரக்கோணம் அடுத்த கும்பினிபேட்டையை சேர்ந்த விஷ்ணு, 29, அகூர் சேர்ந்த சூர்யா, 23, நொச்சிலியை தனுஷ், 20 என, தெரிந்தது.திருத்தணி போலீசார் மூன்று பேர் மீது வழக்கு பதிந்து கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ