திருத்தணி நகராட்சி ஆணையர் பொறுப்பேற்பு
திருத்தணி, திருத்தணி நகராட்சியில் ஆணையராக பணியாற்றி வந்த அருள் திருச்செங்கோடு நகராட்சி ஆணையராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இவருக்கு பதிலாக பி.ஆர். பாலசுப்பிரமணியம் நேற்று திருத்தணி நகராட்சியின் புதிய ஆணையராக பொறுப்பேற்றுக் கொண்டார். இவர் திருச்சி மாவட்டம் மணப்பாறை நகராட்சியில் ஆணையராக பணிபுரிந்து வந்தார்.இவர் ஏற்கனவே திருத்தணி நகராட்சியில், 2020 மார்ச் 9ம் தேதி முதல், 2021 ஜூலை 23ம் தேதி வரை ஆணையராக பணிபுரிந்து வந்தார்.