உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / திருத்தணி தாசில்தார் மீண்டும் மாற்றம்

திருத்தணி தாசில்தார் மீண்டும் மாற்றம்

திருத்தணி:திருத்தணியில் நியமிக்கப்பட்ட தாசில்தார் மீண்டும் மாற்றப்பட்டு, புதிதாக தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் தனி தாசில்தார் குமார், திருத்தணி தாசில்தாராக தற்போது நியமிக்கப்பட்டுள்ளார். திருத்தணி தாசில்தாராக பணியாற்றி வந்த மலர்விழி, கடந்த 6ம் தேதி ஆர்.கே.பேட்டை தாசில்தார் அலுவலகத்தில், சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தாராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இவருக்கு பதிலாக, கும்மிடிப்பூண்டி, மாநெல்லூர் சிப்காட் அலுவலகத்தில் தனி தாசில்தாராக பணிபுரியும் உமாசங்கரி, திருத்தணி தாசில்தாராக நியமிக்கப்பட்டார். இவர், திருத்தணி தாசில்தாராக பொறுப்பேற்பதற்கு முன்பே, நேற்று முன்தினம் இரவு திடீரென உமாசங்கரி பணியிட மாற்றம் உத்தரவை ரத்து செய்து, மீண்டும் அதே இடத்தில் நியமிக்கப்பட்டு உள்ளார். தற்போது, திருத்தணி தாசில்தாராக, நந்தனம் தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய தனி தாசில்தார் குமார் நியமிக்கப்பட்டுஉள்ளார். கடந்த வாரம் நியமிக்கப்பட்ட தாசில்தார் பொறுப்பு ஏற்காமலேயே, திருத்தணி தாசில்தார் பதவிக்கு மற்றொரு தனி தாசில்தார் நியமிக்கப்பட்டுள்ளது, வருவாய் துறை அதிகாரிகள் இடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி