/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / திருவள்ளூர்: புகார் பெட்டி;கம்பத்தில் படர்ந்த கொடிகள் மின்தடையால் கடும் அவதி
திருவள்ளூர்: புகார் பெட்டி;கம்பத்தில் படர்ந்த கொடிகள் மின்தடையால் கடும் அவதி
கம்பத்தில் படர்ந்த கொடிகள் மின்தடையால் கடும் அவதி
திருவாலங்காடு ஒன்றியம் தாழவேடு சமத்துவபுரம் அருகே மின்கம்பம் அமைத்து, சமத்துவபுரம் குடியிருப்பு மற்றும் தாழவேடு காலனி பகுதிக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளன.இந்நிலையில், சமத்துவபுரம் அருகே உள்ள மின்கம்பம் இருக்கும் இடம் முழுதும் செடிகள் வளர்ந்தும், மின்கம்பம் முழுதும் கொடிகள் வளர்ந்துள்ளன.இதனால், மின்தடை அடிக்கடி ஏற்படுகிறது. மேலும், அப்பகுதி மக்கள் மற்றும் கால்நடைகள் செல்வதற்கு அச்சப்படுகின்றனர். எனவே, மின்கம்பத்தை சுற்றிலும் வளர்ந்துள்ள செடி, கொடிகளை அகற்றி, சீரான மின்சாரம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.