உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / திருவள்ளூர்: புகார் பெட்டி; கும்மிடி பொது சுடுகாடு சீரமைக்க கோரிக்கை

திருவள்ளூர்: புகார் பெட்டி; கும்மிடி பொது சுடுகாடு சீரமைக்க கோரிக்கை

கும்மிடி பொது சுடுகாடு சீரமைக்க கோரிக்கை

கும்மிடிப்பூண்டி ஜி.என்.டி., சாலையோரம், ரெட்டம்பேடு சாலை சந்திப்பில், ஒன்றரை ஏக்கர் பரப்பளவில், பாப்பான்குளம் சுடுகாடு அமைந்துள்ளது. இது, கும்மிடிப்பூண்டி பஜார் மற்றும் அதை சுற்றியுள்ள குடியிருப்பு வாசிகளுக்கான பொது சுடுகாடாக உள்ளது.கும்மிடிப்பூண்டி பேரூராட்சி நிர்வாகத்தினர் முறையாக பராமரிக்காததால், சுடுகாடு முழுதும் புதர்கள் மண்டியுள்ளது. நுழைவாயில் சுவர் உடைந்து, இரும்பு ‛கேட்' இன்றி எப்போதும் திறந்து இருப்பதால், ஏராளமானோர் காலை கடன் மற்றும் சிறுநீர் கழிக்க சுடுகாட்டை பயன்படுத்தி வருகின்றனர்.எனவே, சுடுகாட்டின் நுழைவாயில் இரும்பு கேட் அமைத்து, புதர்களை அகற்றி, மர கன்றுகள் நட்டு, முறையாக பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.- கு.சிவகுருநாதன்,கும்மிடிப்பூண்டி.

சாலையோரம் குப்பை கொட்டி எரிப்பதால் அவதி

திருத்தணி - கொத்துார் செல்லும் ஒன்றிய சாலையில், தினமும் அரசு பேருந்து உட்பட 1,000த்திற்கம் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன.இந்நிலையில், ஊராட்சி நிர்வாகம் சாலையோரம் குப்பை கழிவுகளை கொட்டி தீயிட்டு எரிக்கிறது. இதனால், அவ்வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் நடந்து செல்வோர் சுவாச கோளாறால் அவதிப்படுகின்றனர்.இதுதவிர சாலையோரம் குப்பை கழிவுகள் கொட்டுவதால் துர்நாற்றம் வீசுவதுடன், நோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே, ஊராட்சி நிர்வாகம் சாலையோரம் குப்பை கொட்டுவது மற்றும் எரிப்பதை தவிர்க்க வேண்டும்.- க.பாண்டு, மத்துார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ