உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / கொசு வளர்க்க வசதி செய்து தரும் திருவள்ளூர் நகராட்சி

கொசு வளர்க்க வசதி செய்து தரும் திருவள்ளூர் நகராட்சி

திருவள்ளூர்:திருவள்ளூர் - ஊத்துக்கோட்டை சாலையோரம் பாதாள சாக்கடை கழிவு நீரை திறந்து விடுவதால், குளமாக தேங்கி நோய் பரவும் அபாயம் உள்ளது.திருவள்ளூர் நகராட்சியில், 27 வார்டுகளில், 19,000க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. நகராட்சியில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர், பாதாள சாக்கடை மூலமாக, அப்புறப்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக, திருவள்ளூர் டோல்கேட் பகுதியான ஒன்றாவது வார்டில் துவங்கி, கழிவுநீர் சுத்திகரிப்பு மையம் அமைந்துள்ள தேவி மீனாட்சி நகர் வரை சாலை நடுவில், குழாய் பதிக்கப்பட்டு உள்ளது.நகராட்சியில், அதிகரித்து வரும் வீடுகளால், கழிவுநீர் அதிகளவில் வெளியேற்றப்படுகிறது. சில இடங்களில், பாதாள சாக்கடை குழாயில் அடைப்பு ஏற்பட்டு, கழிவுநீர் செல்ல முடியாமல், 'மேன் ஹோல்' மூலமாக வெளியேறி, சாலையில் தேங்கி விடுகிறது.திருவள்ளூர் டோல்கேட் அருகில், ஊத்துக்கோட்டை சாலையில், ஒன்றாவது வார்டில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் சேகரிக்கும் குழாயில் அடிக்கடி அடைப்பு ஏற்படுகிறது. இதையடுத்து, இரவு நேரத்தில் அந்த குழாயை பாதாள சாக்கடை பராமரிக்கும் ஊழியர்கள் திறந்து, கழிவு நீரை வெளியேற்றி வருகின்றனர்.இதனால், டோல்கேட் வேளாண் விற்பனை மையம் அருகில், சாலையோரம் குளமாக தேங்கி, நோய் பரப்பும் இடமாக மாறிவிட்டது. மேலும், துர்நாற்றத்தால், அப்பகுதிவாசிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.எனவே, பாதாள சாக்கடை அடைப்பினை சீர்படுத்தி, கழிவுநீர் தேங்காமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, நகராட்சி நிர்வாகத்திற்கு பகுதிவாசிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை